வாழ்த்து
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக் கண்டுகொள்ளே - மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் ஒர் பார்வை... - சைவ சமயக்குரவர் நால்வரில் ஒருவர். (மற்ற மூவர் அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தர்)
- மதுரைக்கு அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். (கபிலர் பிறந்த ஊரும் இதுவே)
- இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக பணிப் புரிந்தார்.
- திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்.
- இவரை அழுது அடியடைந்த அன்பர் என்பர்.
- திருவாசகமும் திருகொவையாரும் இவர் அருளிய நூல்கள்.
- இவர் எழுப்பிய கோவில், தற்போது ஆவுடையார் கோவில் என வழங்கப்படும். திருப்பெருந்துறையில் (புதுகோட்டை மாவட்டம்) உள்ளது.
திருவாசகம் ஒர் பார்வை... - சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறை இவரின் திருவாசகமும் திருகோவையாரும் ஆகும்.
- திருவாசகத்தில் 658 பாடல்கள் உள்ளன.
- திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (மொழிபெயர்த்த ஆண்டு 1900)
- சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்.
- திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர் திருவாசகத்தின் பெருமையை உணர்த்துகிறது.
- உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை என்கிறார் ஜி.யு.போப்.
|